Friday, June 19, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தனது பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா எம்பி

தனது பதாகையை கிழித்து எடுத்துச் சென்ற அர்ச்சுனா எம்பி

யாழில் தனது பதாகைக்கு பாதணிகளால் மாலை அணிவிக்கப்பட்டிருந்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் குறித்த பதாகையை கிழிந்து எடுத்துச் சென்றுள்ளார்.

யாழ்ப்பாண நகரை அண்டிய பிரதான வீதியில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகையொன்று வைக்கப்பட்டு பாதணிகளால் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணத்தில் நடைபெறும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில்m நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சபை நாகரிகமின்றி கூட்டங்களைக் குழப்பும் வகையில் செயற்படுவதாகப் பொதுமக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் தரப்பில் பரவலான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

நேற்று (19) நடைபெற்ற தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலும் அவர் மிக மோசமான வார்த்தைப் பிரயோகங்களில் ஈடுபடும் காணொளிகள் சமூக ஊடகங்களில் வெளியாகி, கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தன.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே, யாழ்ப்பாண நகரில் உள்ள அவரது பதாகைக்குச் பாதணிகளால் மாலை அணிவிக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது.

இந்நிலையில் குறித்த இடத்திற்கு தனது காரில் சென்ற அர்ச்சுனா இராமநாதன் பதாகையை கிழித்து தனது காரில் எடுத்து சென்றுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments