Saturday, August 15, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்தடைப்பட்டிருந்த ஹெட்டன் - கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை திறப்பு!

தடைப்பட்டிருந்த ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை திறப்பு!

குயில்வத்தை பகுதியில் தடைப்பட்டிருந்த ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியின் ஒரு வழிப்பாதை தற்போது போக்குவரத்திற்காக திறக்கப்பட்டுள்ளது.

ஹெட்டன் – கொழும்பு பிரதான வீதியின் குயில்வத்தை பகுதியில் இன்று (15) அதிகாலை 1.00 மணியளவில் மண்மேடு ஒன்று சரிந்து வீழ்ந்தமையினால் அவ்வீதி முற்றாகத் தடைப்பட்டிருந்தது.

எனினும், தற்போது போக்குவரத்திற்காக ஒரு வழிப்பாதை திறக்கப்பட்டுள்ள போதிலும், மீண்டும் மண்மேடு சரிந்து விழும் ஆபத்து நிலவுவதால் அப்பாதையூடாக அவதானத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

அத்துடன் அப்பகுதியில் தொடர்ந்து இடைவிடாது மழை பெய்து வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments