Saturday, March 14, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000-ஐ இழந்த சீரியல் நடிகர்

சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000-ஐ இழந்த சீரியல் நடிகர்

சமூக வலைதளங்கள் மூலம் மோசடி செய்து பணம் பறிக்கும் சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. இது தொடர்பாக அரசு தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், பலர் மோசடிக்காரர்களின் வலையில் விழுந்து தங்கள் பணத்தை இழக்கின்றனர்.

அந்த வகையில் சீரியல் நடிகர் செந்தில் சைபர் கிரைம் மோசடியில் ரூ.15,000 பணத்தை இழந்த சம்பவம் அரங்கேறியுள்ளது. இது தொடர்பாக அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், “கோவையை சேர்ந்த நண்பர் ஒருவரின் வாட்ஸ்அப் எண்ணில் இருந்து எனக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் தனக்கு உடனடியாக ரூ.15,000 வேண்டும் என்று கேட்டிருந்தார்.

பணத்தை அனுப்புவதற்காக ஒரு வங்கி கணக்கு எண்ணையும் அனுப்பினார். அதை சோதனை செய்து பார்க்காமல் நானும் பணத்தை அனுப்பிவிட்டேன். பணத்தை அனுப்பிய பிறகு யோகேந்தர் என வேறு ஒரு நபரின் பெயரை காட்டியது.

இதனால் சந்தேகமடைந்து எனது நண்பரை தொடர்ந்து கொண்டு கேட்டபோது, தனது வாட்ஸ்அப் கணக்கை யாரோ முடக்கிவிட்டார்கள் என்று அவர் கூறினார். அவரது எண்ணில் இருந்து இதே போல் பலருக்கு குறுஞ்செய்து அனுப்பப்பட்டுள்ளதாகவும், சிலர் பணத்தையும் அனுப்பியிருக்கிறார்கள் என்றும் கூறினார்.

இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளதாக அவர் தெரிவித்தார். எனவே, இதுபோல் உங்கள் நண்பர் அல்லது உறவினர்களின் எண்ணில் இருந்து குறுஞ்செய்தி வந்தால், பணத்தை அனுப்புவதற்கு முன் சம்பந்தப்பட்ட நபரை தொடர்பு கொண்டு உறுதி செய்து கொள்ளுங்கள்” என்று தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments