Friday, March 13, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் இந்தி சேர்ப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை வானிலை மையத்தின் அறிக்கையில் இந்தி சேர்ப்பு – செல்வப்பெருந்தகை கண்டனம்

மத்திய அரசு எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது: தென் இந்தியாவில் கேரளா, ஆந்திரா ஆகிய மாநிலங்களில் வானிலை அறிக்கை ஆங்கிலத்துடன் வெளிவந்த நிலையில் தமிழ்நாட்டில் மட்டும் முதன் முறையாக இந்தி மொழியுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது.

இங்கு மும்மொழிக்கொள்கை குறித்து சர்ச்சையாகவுள்ள நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் இந்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை அளிக்கிறது. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பில் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகள் மட்டுமே இடம்பெறும். இருமொழிக் கொள்கையை பின்பற்றும் தமிழ்நாட்டில் தற்போது உள்நோக்கத்தோடு வானிலை அறிக்கையில் இந்தியை திணித்துள்ளது மத்திய அரசு. இந்த செயல் மத்திய அரசின் ஆதிக்க உணர்வையே காட்டுகிறது. இந்தி மொழிக்கு இங்கு யாரும் விரோதிகள் கிடையாது. ஆனால், வலுக்கட்டாயமாக திணிப்பதைத்தான் எதிர்க்கின்றோம். எந்தவகையிலாவது இந்தியை தமிழ்நாட்டில் திணிப்பதிலேயே தீவிரமாகவுள்ள மத்திய அரசுக்கு எனது கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments