Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டம் ; இருவருக்கு விளக்கமறியல் ; 25 பேர் பிணையில் விடுதலை

சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டம் ; இருவருக்கு விளக்கமறியல் ; 25 பேர் பிணையில் விடுதலை

நீதிமன்ற உத்தரவை மீறி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளரான மதுஷான் சந்திரஜித் உட்பட இருவரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 04 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாவத்தை நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (28) உத்தரவிட்டுள்ளது.

மேலும் கைது செய்யப்பட்ட ஏனைய 25 பேரை பிணையில் விடுதலை செய்யுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

இணைந்த சுகாதார விஞ்ஞான கற்கைகள் பீட மாணவர் சங்கம் நேற்று வியாழக்கிழமை (27) சுகாதார அமைச்சின் முன்பாக ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நீதிமன்ற உத்தரவையும் மீறி சுகாதார அமைச்சு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் மாணவர் ஒன்றியத்தின் அழைப்பாளர் மதுஷான் சந்திரஜித் உட்பட 27 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments