ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களில் சுக்ரோஸ் மற்றும் பிரக்டோஸ் போன்ற சீனைகளைச் சேர்ப்பதைத் தடை செய்ய இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) முன்மொழிந்துள்ளது.
இது தொடர்பான வரைவு விதிமுறைகள் ஒக்டோபர் 16ஆம் திகதி வெளியிடப்பட்டுள்ளன. குழந்தைப் பருவத்தில் தேவையற்ற சீனி உட்கொள்ளலைக் குறைத்து, உடல் பருமன் உள்ளிட்ட சுகாதாரப் பாதிப்புகளைத் தடுப்பதே இதன் நோக்கமாகும்.
தற்போதைய விதிகளின்படி, குறிப்பிட்ட அளவில் இச்சீனைகளைச் சேர்க்க அனுமதி உள்ள நிலையில், புதிய முன்மொழிவின்படி ஆறு மாதம் வரையிலான குழந்தைகளுக்கான உணவுகளில் அவற்றைச் சேர்ப்பது முற்றாகத் தடை செய்யப்படும்.
மேலும், குழந்தைகளின் முதல் ஆறு மாதங்களில் தாய்ப்பாலை மட்டுமே வழங்க வேண்டும் என்ற சுகாதாரப் பரிந்துரைகளுக்கு ஆதரவளிக்கும் வகையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.
இந்த வரைவு விதிமுறைகள் தொடர்பில் பொதுமக்களும் சம்பந்தப்பட்ட தரப்பினரும் தமது கருத்துகளையும் எதிர்ப்புகளையும் சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
எனினும், இறுதி விதிமுறைகள் உறுதிப்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்த பின்னரே இந்தத் தடை அமுலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


