அமரன் திரைப்படத்தின் பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, கமல்ஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படம் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
“‘தாய் கிழவி’ பட இயக்குநர் சிவகுமார் முருகேசன் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகும் ‘சேயோன்’ திரைப்படத்தில் பாக்யஸ்ரீ போர்ஸ், பால சரவணன், அருள்தாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இத்திரைப்படம் எதிர்வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், இத்திரைப்படத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரும் இயக்குநருமான சீமான் இணைந்துள்ளதாகப் படக்குழு சிறப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
கமல்ஹாசனின் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் இரண்டாவது படமான ‘சேயோன்’ திரைப்படத்தில் சீமானின் இணைப்பு, ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


