Monday, June 8, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெண் பிணையில் விடுதலை

சாமர சம்பத்துக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகளுடன் தொடர்புடைய பெண் பிணையில் விடுதலை

சாமர சம்பத் தசநாயக்கவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவரை 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்ய கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனவல இன்று வியாழக்கிழமை (24) உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த பெண்ணுக்கு எதிராக வெளிநாட்டு பயணத் தடையும் விதித்து கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இந்த வழக்கு எதிர்வரும் ஜூன் மாதம் 17 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

2016 ஆம் ஆண்டில் ஊவா மாகாண முதலமைச்சராக சாமர சம்பத் தசநாயக்க கடமையாற்றிய போது பாடசாலை மாணவர்களுக்கு புத்தகப்பை வழங்குவதற்காக மாகாண சபை ஊடாக வங்கியிலிருந்து 10 இலட்சம் ரூபாவை காசோலையாக பெற்று அதனை பணமாக மாற்றி தனிப்பட்ட தேவைக்காக பயன்படுத்தியமை உள்ளிட்ட ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு எதிர்வரும் மே மாதம் 05 ஆம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments