Tuesday, March 10, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை போராட்டம்

சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை போராட்டம்

சென்னை கிண்டி அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்து பல்வேறு மாணவர் அமைப்பினரும், அரசியல் கட்சியினரும் தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து 6 முறை சாட்டையால் அடித்து போராட்டம் நடத்துவேன் என்றும் தி.மு.க. ஆட்சியை அகற்றும் வரை நான் காலணிகள் அணிய மாட்டேன். நாளை முதல் 48 நாட்களுக்கு நான் விரதம் இருந்து அறுபடை முருகன் கோவில்களுக்கு சென்று, முருகப்பெருமானிடம் முறையிடப்போகிறேன் என்று பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த நிலையில், மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து 6 முறை சாட்டையால் தன்னைத்தானே அடித்து அண்ணாமலை ‘போராட்டம் நடத்தினார். மேல் சட்டை அணியாமல், பச்சை வேஷ்டி அணிந்து கோவையில் உள்ள அவரது வீட்டின் முன்பு இந்த போராட்டத்தை நடத்தினார். அண்ணாமலை சாட்டையால் அடிக்கும்போது அங்கு கூடியிருந்த பாஜக தொண்டர்கள் வெற்றிவேல்… வீரவேல் என முழக்கமிட்டனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments