Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொலன்னாவையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

கொலன்னாவையில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

கொழும்பு – வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கொலன்னாவை பிரதேசத்தில் சுங்கவரி செலுத்தாமல் சட்டவிரோதமாக நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரட்டுகளுடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (07) மாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வெல்லம்பிட்டி, கொலன்னாவை பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 2,000 வெளிநாட்டு சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக வெல்லம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெல்லம்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments