Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு - நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பதிவு

கொட்டாஞ்சேனை மாணவி உயிர்மாய்ப்பு – நீதிமன்றத்தில் சாட்சியங்கள் பதிவு

கொழும்பு கொட்டாஞ்சேனையில் மாணவி உயிர்மாய்த்த சம்பவம் தொடர்பான சாட்சி விசாரணைகள் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (15) நடத்தப்பட்டன.

கொழும்பு பதில் நீதவான் சம்பத் ஜெயவர்தன முன்னிலையில், கொட்டாஞ்சேனை பொலிஸாரினால் சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டு, அவர்களது வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டன.

முதலாவதாக, மாணவி உயிர்மாய்த்துக்கொண்ட அடுக்குமாடி குடியிருப்பினது தலைவரின் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டது.

அடுத்ததாக, மாணவியின் தாயாரிடம் வாக்குமூலம் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டது,

மாணவியின் மரணம் தொடர்பில் மேலதிகமாக சாட்சியங்களை பதிவு செய்யும் நடவடிக்கையை எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீதவான் ஒத்திவைத்துள்ளார்.

அன்றைய தினம் மாணவியின் தாயாரிடமிருந்து மேலதிக சாட்சியங்களை பெற்று பதிவு செய்யுமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments