Thursday, August 27, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்பு!

காற்றின் வேகம் மணிக்கு 60 கி.மீ வரை அதிகரிக்க வாய்ப்பு!

மன்னார் ஊடாக காங்கேசன்துறையிலிருந்து புத்தளம் வரையிலும், ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலும் உள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன், புத்தளத்திலிருந்து கொழும்பு, காலி மற்றும் மாத்தறை ஊடாக பொத்துவில் வரையிலான கடற்பகுதிகளில் அலைகளின் உயரமானது 2 முதல் 2.5 மீற்றர் வரை உயரக்கூடும் என்றும் அத்திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய, நிலவும் வானிலை தொடர்பில் கடற்தொழிலாளர்கள் மற்றும் கடற்படையினர் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments