புத்தல – கதிர்காமம் வீதியில் இடம்பெற்ற காட்டு யானை தாக்குதலில் யாத்திரிகர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
யால வனப்பகுதிக்கு அருகில் பயணித்துக் கொண்டிருந்த பேருந்தை காட்டு யானை ஒன்று தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்போது சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து வீதியை விட்டு விலகி கவிழ்ந்துள்ளது.
விபத்தில் பேருந்தில் பயணித்த பலர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.


