Friday, August 28, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கல்குடாவில் கைப்பேசி வெடித்து இளைஞர் உயிரிழப்பு!

கல்குடாவில் கைப்பேசி வெடித்து இளைஞர் உயிரிழப்பு!

கல்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கருங்காலிச்சோலை, பாசிக்குடா பகுதியில் கைப்பேசி வெடித்ததில் 20 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் வியாழக்கிழமை (27) மாலை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்த இளைஞர் கைப்பேசியை மின்னேற்றத்தில் (Charging) இணைத்துவிட்டு, அதனை நெஞ்சில் வைத்தவாறு உறங்கியதாகவும், இதன்போது மின்சாரம் தடைப்பட்டு, சிறிது நேரத்தின் பின்னர் மின்சாரம் மீண்டும் வழமைக்குத் திரும்பிய சந்தர்ப்பத்தில் இந்த அனர்த்தம் இடம்பெற்றதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments