Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கல்கிஸ்ஸையில் சந்தேகத்திற்கிடமான மரணம்!

கல்கிஸ்ஸையில் சந்தேகத்திற்கிடமான மரணம்!

கல்கிஸ்ஸை, படோவிட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிற்குள் நபர் ஒருவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்துள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸாருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

 

இவ்வாறு உயிரிழந்துள்ளவர் படோவிட்ட, கல்கிஸ்ஸை பகுதியைச் சேர்ந்த 54 வயதுடைய ஒருவராவார்.

 

குறித்த நபர் அந்த வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளதுடன், அவரது கழுத்துப் பகுதியில் சிறிய வெட்டுக் காயம் ஒன்று காணப்படுவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.

 

உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக களுபோவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கல்கிஸ்ஸை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments