Sunday, March 15, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

கனடா பயணத்தை நிறைவு செய்து குரோஷியா புறப்பட்டார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி அரசு முறை பயணமாக வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் முதல் நாடாக அவர் கடந்த 15ம் தேதி சைப்ரஸ் சென்றார். அங்கு அந்நாட்டு ஜனாதிபதி கிறிஸ்டோடவுலிட்சை பிரதமர் மோடி சந்தித்தார்.

இதனை தொடர்ந்து பிரதமர் மோடி கனடா சென்றார். கனடாவின் கன்னாஸ்கிஸ் நகரில் நேற்று நடந்த ஜி7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி கலந்துகொண்டார்.

இந்த மாநாட்டில் கனடா பிரதமர், இத்தாலி, பிரான்ஸ் உள்பட பல்வேறு நாடுகளின் தலைவர்களை பிரதமர் மோடி சந்தித்தார்.

இந்நிலையில், கனடா பயணத்தை நிறைவு செய்த பிரதமர் மோடி அங்கிருந்து குரோஷியா புறப்பட்டார். குரோஷியா செல்லும் பிரதமர் மோடி அந்நாட்டு ஜனாதிபதி சோரன் மிலனொவ் மற்றும் பிரதமர் பென்கொவிக்கை சந்திக்கிறார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments