Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கதாநாயகியாகும் மோகன்லால் மகள்!

கதாநாயகியாகும் மோகன்லால் மகள்!

இந்தியளவில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் மோகன்லால். மலையாள சினிமாவின் வணிகத்தை உலகளவில் கொண்டு சென்றவர்களில் முதன்மையானவராகக் கருதப்படுகிறார்.

மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் நடிகராக உள்ள நிலையில், தற்போது அவரின் மகள் விஸ்மயாவும் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகிறார்.

மோகன்லாலின் தயாரிப்பு நிறுவனமான ஆசிர்வாத் சினிமாஸ் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளதையடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

2018 படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ஜூட் ஆண்டனி ஜோசஃப், விஸ்மயாவின் முதல் படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு, ‘துடக்கம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இது மோகன்லால் ரசிகர்களிடம் உற்சாகத்தை அளித்துள்ளது.

நடிகையாவதற்கு முன்பே விஸ்மயா, “க்ரைன்ஸ் ஆஃப் ஸ்டார்டஸ்ட் (grains of stardust)” என்கிற கவிதை நூலை வெளியிட்டு கவிஞரானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments