Wednesday, March 18, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்கதாநாயகனாகும் ஷங்கர் மகன்!

கதாநாயகனாகும் ஷங்கர் மகன்!

இயக்குநர் ஷங்கரின் மகன் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இயக்குநர் ஷங்கர் இந்தியன் – 2, கேம் சேஞ்சர் படங்களின் தோல்வியால் பெரிய ஏமாற்றத்தில் இருக்கிறார். இரு படங்களும் எதிர்பார்த்த வணிக வெற்றியையும் நல்ல விமர்சனங்களையும் பெறாதாது ஷங்கருக்கு அதிருப்தியை அளித்துள்ளது.

அடுத்ததாக, ஷங்கர் வேள்பாரி நாவலை இயக்கும் முயற்சிகளில் இருக்கிறார்.

இதற்கிடையே, ஷங்கரின் மகன் அர்ஜித் இயக்குநராகும் விருப்பத்தில் இருந்ததால் அவரை ஏ. ஆர். முருகதாஸிடம் உதவி இயக்குநராக ஷங்கர் சேர்த்துவிட்டார்.

அர்ஜித்தும் நடிகர் சிவகார்த்திகேயனின் மதராஸி திரைப்படத்தில் உதவி இயக்குநராகப் பணியாற்றினார்.

இந்த நிலையில், அர்ஜித் இயக்குநர் அட்லியின் உதவி இயக்குநர் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகவுள்ளாதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தை பேசன் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments