Thursday, October 8, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி!

கண்ணீருடன் விடைபெற்ற மெஸ்ஸி!

அர்ஜென்டினா கால்பந்து அணியின் ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி, 21 ஆண்டுகளுக்கும் மேலான தனது சர்வதேச கால்பந்து பயணத்தை கண்ணீருடன் நிறைவு செய்துள்ளார்.

பியூனஸ் அயர்ஸில் உள்ள மானுமென்டல் மைதானத்தில் 85,000-க்கும் மேற்பட்ட ரசிகர்கள் முன்னிலையில் பெனின் அணிக்கு எதிரான நட்பு ரீதியிலான போட்டியில் மெஸ்ஸி அர்ஜென்டினா அணிக்காக தனது கடைசி போட்டியில் விளையாடினார்.

இந்தப் போட்டியில் அர்ஜென்டினா 3–0 என்ற கணக்கில் பெனினை வீழ்த்தியதுடன், மெஸ்ஸி ஒரு கோல் அடித்து இரண்டு கோல்களுக்கு உதவியும் வழங்கினார்.

போட்டிக்கு முன்னரும், தேசிய கீதம் இசைக்கப்பட்டபோதும் மெஸ்ஸி கண்ணீர் சிந்தியதுடன், ரசிகர்கள் அவருக்கு உணர்வுபூர்வமான பிரியாவிடை அளித்தனர். போட்டியின் 10ஆவது நிமிடத்தில் 10ஆம் இலக்க ஜெர்சியை குறிக்கும் வகையில் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டி அவருக்கு மரியாதை செலுத்தினர்.

2005ஆம் ஆண்டு அர்ஜென்டினா மூத்த அணியில் அறிமுகமான மெஸ்ஸி, அந்த அணிக்காக 208 போட்டிகளில் விளையாடி 126 கோல்களை அடித்துள்ளார். 2021 கோபா அமெரிக்கா, 2022 உலகக் கோப்பை மற்றும் 2024 கோபா அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய சர்வதேச கிண்ணங்களை அவர் அர்ஜென்டினாவுக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.

சர்வதேச கால்பந்தில் இருந்து மெஸ்ஸி விடைபெற்றாலும், அவர் தொடர்ந்து இன்டர் மியாமி அணிக்காக விளையாடவுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments