ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் கடும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என்பதால், வளிமண்டலவியல் திணைக்களம் ‘அம்பர்’ எச்சரிக்கை விடுத்துள்ளது.
இன்று (20) காலை 11.00 மணிக்கு விடுக்கப்பட்ட இந்த எச்சரிக்கை, இரவு 11.30 மணி வரை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களின் பல இடங்களில் கடும் மின்னல், இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


