Sunday, September 20, 2026
spot_img
Homeபொது செய்திகள்அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்

அமேசான் மழைக்காடுகளின் மையப்பகுதியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தப்பட்ட பழங்குடியின கிராமம் ஒன்றை, விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் படம்பிடித்துள்ள வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அமேசான் காடுகளின் பிரமாண்டம் தென் அமெரிக்க கண்டத்தின் வடபகுதியில் சுமார் 70 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்துள்ள அமேசன், உலகின் மிகப்பெரிய மழைக்காடாகும். பிரேசில், பெரு, கொலம்பியா, பொலிவியா உள்ளிட்ட 9 நாடுகளில் பரவியுள்ள இக்காடுகளில் 3,900 கோடி மரங்களும், 16,000-க்கும் மேற்பட்ட உயிரின வகைகளும் வாழ்கின்றன. உலகளாவிய அளவில் ஆண்டுக்கு சுமார் 60,000 கோடி டன் ஒக்சிஜனை உற்பத்தி செய்யும் இந்த காடுகள், புவியின் மிகமுக்கியமான அமைப்பாக திகழ்கின்றன.

அச்சுறுத்தலுக்கு உள்ளாகும் இயற்கை சமீபகாலமாக உலகமயமாக்கல், மனித பேராசை, சட்டவிரோத மரக்கடத்தல், சுரங்கப் பணிகள், நில அபகரிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்ற காரணங்களால் அமேசன் காடுகள் பெருமளவில் அழிக்கப்பட்டு வருகின்றன. இதற்கு எதிராக உலகளாவிய சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

கொடிய விஷப் பூச்சிகள், ஊர்வன மற்றும் வனவிலங்குகள் நிறைந்த அமேசான் காடுகளின் ஆழமான பகுதிகளுக்கு மனிதர்கள் செல்வது மிகவும் ஆபத்தானது. இத்தகைய கடினமான சூழ்நிலையிலும், வான்வழியாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், பழங்குடியினர் வசிக்கும் சில குடிசைகளும், அதற்கு சற்று தொலைவில் வெட்டி வீழ்த்தப்பட்ட காய்ந்த மரங்களும் தெளிவாகக் காட்சிளிக்கின்றன.

வெளிவுலகத்துடன் எவ்வித தொடர்புமின்றி வாழ்ந்து வரும் இந்த பழங்குடியின மக்களின் பாதுகாப்புக்கும் சுதந்திரத்திற்கும் எந்தவொரு இடையூறும் ஏற்படாத வகையில், மிக உயரத்திலிருந்து இந்த வீடியோ படம்பிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments