Thursday, September 24, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஐ.நா.ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது' அர்ஜென்டினா ஜனாதிபதி

ஐ.நா.ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது’ அர்ஜென்டினா ஜனாதிபதி

தற்போது ஐ.நா.ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டதாக அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலெய் குற்றம்சாட்டியுள்ளார்.

தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான அர்ஜென்டினாவின் ஜனாதிபதி ஜேவியர் மிலெய் இன்று ஐ.நா. சபையில் உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது, மோதல்களையும், போர்களையும் தடுப்பதில் ஐ.நா.தோற்றுவிட்டது என ஜேவியர் மிலெய் குற்றம்சாட்டியுள்ளார்.

ஐ.நா.சபையின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்த அவர், மோதல்களையும்,போர்களையும் தடுப்பதில் ஐ.நா.தோற்றுவிட்டது.

குழப்பம், வன்முறை மற்றும் பயங்கரவாதம் தொடர்வதற்கும், சர்வாதிகாரம் தழைப்பதற்கும் ஐ.நா. அனுமதித்துவிட்டது.

தற்போது ஐ.நா.ஒரு பயனற்ற அமைப்பாக மாறிவிட்டது.நல்ல நோக்கம் கொண்ட அரசியல்வாதிகள் போல் வேடமணிந்துள்ள,அதீத ஆணவம் கொண்ட ஒட்டுண்ணிகளின் வர்க்கத்தை தக்கவைப்பதே தற்போது ஐ.நா.வின் ஒரே நோக்கமாக உள்ளது” என்று தெரிவித்தார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments