Wednesday, March 18, 2026
spot_img
Homeகனடா செய்திகள்ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான கனேடியரின் அடையாளம் தெரிந்தது

ஏர் இந்தியா விமான விபத்தில் பலியான கனேடியரின் அடையாளம் தெரிந்தது

இந்தியாவிலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று மதியம் விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த 200க்கும் அதிகமானோர் உயிரிழந்தார்கள்.

அவர்களில் ஒரு கனேடிய குடிமகளும் அடங்குவார்.

இந்நிலையில், விமான விபத்தில் பலியான கனேடிய பெண்ணின் அடையாளம் தெரியவந்துள்ளது.

அவரது பெயர் நிராலி சுரேஷ்குமார் பட்டேல். நிராலி, ஒன்ராறியோவிலுள்ள Mississaugaவில் பல் மருத்துவராகப் பணியாற்றிவந்துள்ளார்.

’அது எனது மனைவி’ என்று ஊடகவியலாளர்களிடம் கூறிய நிராலியின் கணவர், ’பேசும் நிலையில் இப்போது நான் இல்லை’ என்று கூறியுள்ளார்.

அவரும் அவரது ஒரு வயதுக் குழந்தையும் இந்தியா புறப்பட தயாராகிவருகிறார்கள்.

இந்நிலையில், ஒன்ராறியோ பிரீமியரான Doug Ford, நிராலியின் குடும்பத்தினருக்கு தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

சமூக ஊடகமான எக்ஸில் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், அகமதாபாத் அருகே நடந்த ஏர் இந்தியா விபத்தில் உயிரிழந்தவர்களில் ஒன்ராறியோவின் மிசிசாகாவைச் சேர்ந்த ஒரு கனேடியரும் ஒருவர் என்பதை அறிந்து நான் வருத்தமடைந்தேன்.

ஒன்ராறியோ மக்களின் சார்பாக, பாதிக்கப்பட்ட ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments