Friday, November 20, 2026
spot_img
Homeபொது செய்திகள்ஏ.ஐ.வளர்ச்சியால் 15 மாதங்களில் மாறப்போகும் உலகம்?

ஏ.ஐ.வளர்ச்சியால் 15 மாதங்களில் மாறப்போகும் உலகம்?

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் தற்போதைய வேகத்தில் தொடர்ந்து வளர்ச்சியடைந்தால், இன்னும் சுமார் 15 மாதங்களில் மனிதர்களைவிட அதிக திறனுடன் செயல்படக்கூடிய ஏ.ஐ. உருவாகலாம் என ஆந்த்ரோபிக் (Anthropic) நிறுவனத்தின் ஏ.ஐ. பாதுகாப்பு ஆய்வாளரான தாவோ லின் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த பாலிசேட் ரிசர்ச் அமைப்புக்கு வழங்கிய நேர்காணலில் இந்தக் கணிப்பை அவர் முன்வைத்துள்ளார்.

குறிப்பாக, மென்பொருள் உருவாக்கம், திரைப்படத் தயாரிப்பு, அரசியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் உலகின் முன்னணி நிபுணர்களுக்கு இணையாகவும், அவர்களைவிட அதிக திறனுடனும் ஏ.ஐ. செயல்படக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், ஏ.ஐ. வளர்ச்சியால் முதலில் பலர் தங்களது தற்போதைய வேலைகளை இழந்து வேறு துறைகளுக்கு மாற வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும், பின்னர் அந்தத் துறைகளிலும் ஏ.ஐ. ஆதிக்கம் செலுத்தினால் பெருமளவிலான மக்கள் நிரந்தரமாக வேலைவாய்ப்பை இழக்கக்கூடும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் வாழ்வாதாரத்திற்காக அரசின் நிதியுதவியை நம்பியிருக்கும் சூழல் உருவாகலாம் எனவும் எச்சரித்துள்ளார்.

இதனைத் தவிர்க்க ஏ.ஐ. நிறுவனங்கள் தங்களின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளின் வேகத்தை நான்கில் ஒரு பங்காகக் குறைத்து, பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

எனினும், இவை தாவோ லின்னின் தனிப்பட்ட கணிப்புகளே தவிர, ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ கணிப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments