Wednesday, March 11, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறலாம் - சீமான் ஆவேசம்

என்னை பாலியல் குற்றவாளி என்று எப்படி கூறலாம் – சீமான் ஆவேசம்

சென்னை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது

என்னை பாலியல் குற்றவாளி என நீங்கள் எப்படிக் கூறுவீர்கள்? குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதா?

விசாரணை நடைபெற்றுவரும்போது குற்றவாளி என எப்படி முடிவு செய்வீர்கள்; நீங்கள் நீதிபதியா?

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணத்தில் உங்கள் கருத்து என்ன? அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை சம்பம் உள்ளிட்ட பாலியல் வன்கொடுமைக்கு கனிமொழி ஏன் கண்டனம் தெரிவிக்கவில்லை.

என்னை எதிர்கொள்ள முடியாமல் நடுங்குகின்றனர்.என்னைப் பார்த்து நடுங்குவதால் எனக்கு எதிராக சதி செய்கின்றனர்.

நாடெங்கும் பெண்களுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை நடந்தபோது கனிமொழி வாய் திறந்தாரா? எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பதுதான் உங்கள் கொள்கையா? உருவாக்க முடியாத இயற்கை வளங்களை அழிக்க உங்களுக்கு உரிமை கொடுத்தது யார்? தமிழ்நாட்டில் இருந்து நாள்தோறும் 1 லட்சம் டன் பாறைகள் கொண்டுசெல்லப்படுகின்றன. கேரள மாநிலத்தின் கழிவுகள் தமிழ்நாட்டில் கொட்டப்படுகின்றன.

எது வளர்ச்சி என்று கேட்டால் உங்களால் பதில் சொல்ல முடியவில்லை. வளங்களை அழிப்பதே வளர்ச்சி என்பது உங்கள் கொள்கையா? என கேள்வி எழுப்பி உள்ளார்,.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments