எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்தின் (UAE) இலங்கைக்கான தூதுவர் காலித் நசார் சுலைமான் அல்அமெரிக்கும் (Khaleed Nasser Sulaiman AlAmeri) இடையிலான விசேட சந்திப்பொன்று கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம்பெற்றது.
இலங்கைக்கும் ஐக்கிய அரபு அமீரகத்துக்குமிடையே நிலவும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இச்சந்திப்பின் போது கவனம் செலுத்தப்பட்டதுடன், வர்த்தகம், முதலீட்டு ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் மற்றும் இரு நாடுகளும் இணைந்து செயற்படக்கூடிய புதிய துறைகளைக் கண்டறிவது குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இச்சந்திப்பின் போது, மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல், எண்ணெய் விநியோகம் மற்றும் எரிசக்தி விலைகளில் ஏற்படுத்தக்கூடிய தாக்கம் மற்றும் அது இலங்கையின் பொருளாதாரத்திற்கும் நுகர்வோருக்கும் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்கள் குறித்தும் இரு தரப்பினரும் கவனம் செலுத்தினர்.


