Sunday, September 20, 2026
spot_img
Homeகனடா செய்திகள்இசை நிகழ்வில் வாகனம் மோதிய சம்பவம் – ஓட்டுநர் கைது

இசை நிகழ்வில் வாகனம் மோதிய சம்பவம் – ஓட்டுநர் கைது

கனடாவின் கியுபெக் மாகாணம் செயிண்ட்-டைட் பகுதியில் இசை நிகழ்வின்போது மக்கள் கூட்டத்திற்குள் வாகனம் புகுந்து மோதிய சம்பவத்தில், வாகனத்தைச் செலுத்திய 20 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்துக்குப் பின்னர் அங்கிருந்து தப்பிச் சென்ற சந்தேகநபரை சுமார் ஒரு மணி நேர தேடுதலுக்குப் பின்னர் கியுபெக் நகரில் வைத்து பொலிஸார் கைது செய்துள்ளனர்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல என்றும், ஓட்டுநர் மது அருந்தியிருக்கவில்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

சம்பவத்தில் காயமடைந்த ஆறு பேருக்கும் உயிருக்கு ஆபத்தற்ற காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, திட்டமிட்டபடி திருவிழா நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெறும் என்றும், பார்வையாளர்களின் பாதுகாப்புக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் கியுபெக் மாகாண முதலமைச்சர் கிறிஸ்டின் பிரேஷெட் நேரில் சென்று நிலைமையை பார்வையிட்டதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வாழ்த்து தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments