உரிமை கோரிய பொங்கல் சிவில் அமைப்புக்களின் கூட்டினைவின் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் கொட்டகலை பத்தனை சந்தியில் இடம் பெற்றது.
மலையகத்துக்கான காணி உரிமை,தனிவீடு,புதியகிராமங்கள் கோரிய ஒரு பொங்கலாக உரிமை பொங்கல் வைக்கப்பட்டது.
ஹட்டன் பிரதேசத்தை தலமையமாக கொண்டு இயங்கும் சிவில் அமைப்புக்களின் ஊடக குறித்த பொங்கல் வைக்கப்பட்டது. சமூக நல்வழி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சமூக நல்வழி மன்றத்தின் பணிப்பாளர்.திருமதி களியபெருமாள் சந்திரமதி,சுயசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர்.
எ.செல்வராஜ். சமூக அபிவிருத்தி நிறுவனத்தின் சார்பில் ராஜாராம்,பணிப்பாளர் ரவிராம்,ரெடோ நிறுவனத்தின் செயலாளர் சுரேஸ்குமார் மற்றும் பெண்கள் குழுக்களின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டதுடன்.உரைகளையும் நிழ்த்தினர்கள்.



