Monday, June 15, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

ஈரான் மீது திட்டமிடப்பட்ட தாக்குதல்கள் ரத்து: ட்ரம்ப் திடீர் அறிவிப்பு

ஈரானுக்கு எதிராக வியாழக்கிழமை இரவு நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களை இரத்து செய்வதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

ஈரானின் உயர்மட்டத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்தே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

இது குறித்துத் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,

“ஈரான் இஸ்லாமியக் குடியரசுடனான பேச்சுவார்த்தைகள் அந்த நாட்டின் மிக உயர்மட்டத் தலைமை வரை கொண்டு செல்லப்பட்டுஇ அவர்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளதன் அடிப்படையில்இ அமெரிக்க ஜனாதிபதி என்ற முறையில்இ இன்று ஈரான் மீது நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த வான்வழித் தாக்குதல்களையும் குண்டுவீச்சுகளையும் நான் இரத்து செய்துள்ளேன்.

இந்த விவாதங்களும் இறுதிப் புள்ளிகளும்இ அடிப்படைக் கருத்துருவிலும்இ மிக விரிவான விவரங்களிலும்இ இதில் தொடர்புடைய அமெரிக்காஇ இஸ்ரேல்இ சவூதி அரேபியாஇ ஐக்கிய அரபு அமீரகம் இ கத்தார்இ துருக்கிஇ பாகிஸ்தான்இ பஹ்ரைன்இ குவைத்இ ஜோர்டான்இ எகிப்து மற்றும் பிற நாடுகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினராலும் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த உடன்படிக்கை முழுமையாக இறுதி செய்யப்படும் வரைஇ கடற்படை முற்றுகை எவ்வித மாற்றமும் இன்றி முழு வீச்சில் தொடரும். இதற்கான அதிகாரபூர்வ கையெழுத்து நடைபெறும் நேரம் மற்றும் இடம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும்” என்று தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் கடந்த சில நாட்களாக உச்சகட்டத்தை எட்டியிருந்த அமெரிக்கா – ஈரான் போர் பதற்றத்தில் தற்போது முக்கியத் திருப்பமாக அமைந்துள்ளது

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments