Monday, September 28, 2026
spot_img
Homeஉலக செய்திகள்ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில்11 பேர் பலி் ; 24 பேர் காயம்

ஈரானில் பேருந்து கவிழ்ந்ததில்11 பேர் பலி் ; 24 பேர் காயம்

ஈரானில் பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 11 பேர் பலியானதாகவும், 24 பேர் காயமடைந்ததாகவும் அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

மத்திய மார்க்கஸி மாகாணத்தில் உள்ள சவே-ஹமேதான் நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்தது. ஓட்டுநரின் கவனக்குறைவால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக மாகாண போக்குவரத்து காவல்துறை தெரிவித்தது.

பேருந்து எங்குச் சென்றுகொண்டிருந்தது என்பதைப் பற்றி தகவல்கள் அதிகாரிகள் உடனடியாகத் தெரிவிக்கவில்லை. உலகிலேயே மிக மோசமான போக்குவரத்துப் பாதுகாப்புப் பதிவுகளில் ஒன்றை ஈரான் கொண்டுள்ளது.

விபத்துகளால் ஆண்டுக்கு 17,000-க்கும் மேற்பட்டோர் உயிரிழக்கின்றனர்.

பாதுகாப்பற்ற வாகனங்கள், போக்குவரத்து விதிமுறைகளைப் புறக்கணித்தல், போதுமான அவசரக்கால சேவைகள் இல்லாததே இந்த அதிக உயிரிழப்புகளுக்குக் காரணம் என அதிகாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த மாத தொடக்கத்தில், மேற்கு நகரமான சனந்தாஜ் அருகே எரிபொருள் டேங்கர் ஒன்று மற்ற வாகனங்கள் மீது மோதி வெடித்ததில் 11 பேர் பலியானதோடு, மேலும் ஏழு பேர் காயமடைந்தனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments