கொழும்பு கிங்ஸ் மருத்துவமனையில் இரண்டு நோயாளிகளுக்கு, 3,000 கிலோமீற்றருக்கும் அதிகமான தொலைவில் இந்தியாவின் புதுடெல்லியில் இருந்துகொண்டு மருத்துவ நிபுணர்கள் ரோபோ தொழில்நுட்பத்தின் மூலம் அறுவைச் சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சிகிச்சைகள் நேற்று இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இலங்கையில் முதன்முறையாக இரண்டு ரோபோ தொலை அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அறுவைச் சிகிச்சைகள் நடைபெற்றபோது, கொழும்பு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு அருகில் சிறப்பு அறுவைச் சிகிச்சை மருத்துவர்களும் தயார் நிலையில் இருந்தனர். அவசரத் தேவை ஏற்பட்டால் உடனடியாகத் தலையிடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.


