Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு பணிப்பு

இராணுவ வீரர்கள் தங்களது கடவுச்சீட்டுக்களை ஒப்படைக்குமாறு பணிப்பு

இராணுவ மேஜர் பதவிக்குக் கீழுள்ள அனைத்து இராணுவ வீரர்களும் தங்களது கடவுச்சீட்டுக்களை அந்தந்த படைப்பிரிவுகளிடம் ஒப்படைக்குமாறு இலங்கை இராணுவம் பணிப்புரை விடுத்துள்ளது.

வெளிநாட்டு பயிற்சி மற்றும் உத்தியோகபூர்வ விடயங்களுக்காக கடவுச்சீட்டு பெறுவதில் ஏற்பட்டுள்ள தாமதங்களை நிவர்த்தி செய்யும் நோக்கில் நிர்வாக நோக்கங்களுக்காக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments