Wednesday, March 18, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்இரத்தினபுரியில் மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் !

இரத்தினபுரியில் மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் !

இரத்தினபுரி -டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் தனது மாமியாரை கழுத்து நெரித்து கொலை செய்த மருமகன் நேற்று ஞாயிற்றுக்கிழமை (03) கைதுசெய்யப்பட்டதாக இரத்தினபுரி பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் நேற்றைய தினம் அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

74 வயதுடைய மாமியாரே இவ்வாறு கொலைசெய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இரத்தினபுரி -டிப்போ சந்தி பகுதியில் உள்ள வீடொன்றில் சடலம் ஒன்று கிடப்பதாக இரத்தினபுரி பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பொலிஸாரின் விசாரணைகளில், மருமகனுக்கும் மாமியாருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து சந்தேக நபரான மருமகன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைதுசெய்யப்பட்டவர் 29 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments