Friday, September 11, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்இந்தியா - ஆப்கானிஸ்தான் மோதும் முதல் டி20 போட்டி

இந்தியா – ஆப்கானிஸ்தான் மோதும் முதல் டி20 போட்டி

டெல்லியில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் (BRICS) உச்சி மாநாடு காரணமாக, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி ஒத்திவைக்கப்படலாம் என்ற தகவல்களுக்கு மத்தியில், போட்டி திட்டமிட்டபடி நடைபெறும் என டெல்லி மாவட்டக் கிரிக்கெட் சங்கம் (DDCA) தெரிவித்துள்ளது.

தேசிய தலைநகரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு நடைபெறுவதால் ஏற்பட்ட பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து காரணங்களுக்காக, செப்டம்பர் 13 ஞாயிற்றுக்கிழமை அருண் ஜெட்லி மைதானத்தில் திட்டமிடப்பட்ட போட்டியை மாற்றுநாளுக்கு ஒத்திவைக்க டெல்லி பொலிஸார் கோரியிருந்தனர்.

டெல்லி போக்குவரத்துப் பொலிஸாருடன் நடத்தப்பட்ட ஆலோசனையைத் தொடர்ந்து, தேவையான அனைத்து பாதுகாப்பு ஆதரவுகளும் உறுதியளிக்கப்பட்டுள்ளதாகவும், போட்டி திட்டமிட்டபடி செப்டம்பர் 13 அன்று நடைபெறும் என்றும் DDCA தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.

இருப்பினும், போட்டியை ஒரு நாள் தள்ளிப்போட்டு விநாயகர் சதுர்த்தி நாளன்று நடத்த சில தரப்பினர் அழுத்தம் கொடுத்து வருவதால், போட்டி ஒத்திவைக்கப்படும் வாய்ப்பு முற்றிலும் நிராகரிக்கப்படவில்லை என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

3 போட்டிகள் கொண்ட இந்த டி20 தொடரின் அடுத்த இரண்டு போட்டிகள் செப்டம்பர் 15 மற்றும் 17 ஆகிய திகதிகளில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments