Friday, October 16, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்இந்திய பிரதமர் நரேந்திர மோடி கனடாவுக்கு விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி கனடாவுக்கு விஜயம்!

இந்திய பிரதமர் நரேந்திர மோடி வரும் டிசம்பர் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் கனடாவிற்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

கனடா பிரதமர் மார்க் கார்னியுடன் நடைபெற்ற ஆக்கப்பூர்வமான தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து இந்தப் பயணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்பு ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சிக் காலத்தில் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை விவகாரத்தால் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட நீண்ட கால ராஜதந்திர மோதலுக்குப் பிறகு, தற்போது உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தகக் கொள்கைகளால் ஏற்பட்டுள்ள பொருளாதார சவால்களைச் சமாளிக்க கனடா இந்தியாவுடன் நெருங்க முற்பட்டுள்ளது.

இதன் ஒரு பகுதியாக, இரு நாடுகளுக்கும் இடையேயான இருதரப்பு வர்த்தகத்தை 2030 ஆம் ஆண்டுக்குள் 70 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்தை இந்த ஆண்டின் இறுதிக்குள் இறுதி செய்ய இரு தலைவர்களும் உறுதிபூண்டுள்ளனர். இந்தப் பயணத்தின் போது வர்த்தகம், எரிசக்தி, தொழில்நுட்பம், பாதுகாப்பு மற்றும் மக்கள் இடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து முக்கிய விவாதிக்கப்படவுள்ளது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments