பெண்களுக்கான பெட்மிண்டன் அணிப் பிரிவு காலிறுதியில், இந்திய அணி ஜப்பானிடம் 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
இந்தியாவின் ஆடவர் மற்றும் மகளிர் பெட்மிண்டன் அணிகள், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று(22) ஜப்பானை எதிர்த்து காலிறுதிப் போட்டியில் களமிறங்கின.
இந்நிலையில், பெண்களுக்கான பெட்மிண்டன் அணிப் பிரிவு காலிறுதியில் இந்திய அணி தோல்வியடைந்து தொடரிலிருந்து வெளியேறியது.
ஜப்பானின் அய்ச்சி-நகோயா நகரில் 20-வது ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இதில் இந்தியா, ஜப்பான், சீனா உள்பட 45 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
அத்துடன், கிரிக்கெட், பெட்மிண்டன் உட்பட பல விளையாட்டு போட்டிகள் தினமும் நடைபெற்று வருகின்றன.
தற்போது இலங்கை மற்றும் இந்திய கிரிக்கெட் மகளிர் அணிகளுக்கு இடையிலான இறுதி போட்டி நடைபெற்று வருகிறது.


