Wednesday, March 18, 2026
spot_img
Homeவிளையாட்டு செய்திகள்ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி...கைப் கணிப்பு

ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணி…கைப் கணிப்பு

நடப்பு சாம்பியன் இந்தியா உள்பட 8 அணிகள் பங்கேற்கும் 17-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 9-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. அடுத்த வருடம் நடைபெற உள்ள ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பைக்கு ஆசிய அணிகள் தயாராகும் பொருட்டு இந்த தொடர் இம்முறை டி20 வடிவில் நடத்தப்பட உள்ளது. இந்த தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அதன்படி ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், ஓமன் அணிகளும், ‘பி’ பிரிவில் ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஹாங்காங் அணிகளும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதும். லீக் சுற்று முடிவில் இரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறும். இதில் இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை செப்.10-ந் தேதி துபாயில் சந்திக்கிறது. இதைத்தொடர்ந்து பரம எதிரியான பாகிஸ்தானை செப்.14-ந் தேதி துபாயிலும், ஓமனை செப்.19-ந் தேதி அபுதாபியிலும் எதிர்கொள்கிறது. இறுதிப்போட்டி செப்.28-ந் தேதி துபாயில் அரங்கேறுகிறது. இந்த தொடருக்கான இந்திய அணி வரும் 19-ம் தேதி அறிவிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரரான முகமது கைப், ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் யார் யாருக்கு இடம் கிடைக்கும் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா , ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ, அர்ஷ்தீப் சிங், பும்ரா, வருண் சக்ரவர்த்தி ஆகியோர் ஆடும் அணியில் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது.

சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறக்கப்படலாம்.சூர்யகுமார் யாதவ் 3ஆவது இடத்திலம், திலக் குமார் அடுத்தும் களம் இறக்கப்படலாம். அக்சர் படேல் துணை கேப்டனாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது.மாற்று தொடக்க வீரர் இடத்திற்கு ஜெய்ஸ்வால், சுப்மன் கில் இடையே கடும் போட்டி நிலவும். ரிங்கு சிங்கிற்கு வாய்ப்பு குறைவுதான். முகமது சிராஜ், ஜித்தேஷ் சர்மா ஆகியோரையும் பிசிசிஐ கருத்தில் கொள்ளும் என முகமது கைப் தெரிவித்துள்ளார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments