Wednesday, March 18, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர்

ஆக்டர் ஆன தஞ்சாவூர் டாக்டர்

பெண் டாக்டர்கள் சினிமாவிற்கு வருவது அதிகரித்துள்ளது. சாய்பல்லவி, வித்யா பிரதீப் உள்ளிட்ட பலர் உள்ளனர். இந்த நிலையில் தஞ்சாவூரில் இருந்தும் ஒரு டாக்டர், நடிகை ஆகியிருக்கிறார். தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை சேர்ந்தவர் தீபா பாலு. டாக்டருக்கு படித்துள்ள இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகம். இதனால் டாக்டர் சேவையை செய்து கொண்டே யு டியூப்களில் வெளியான சில குறும்படங்களில் நடித்தார். அதில் அவர் நடித்த ‘தேன் மிட்டாய்’ என்ற தொடர் பரவலான பாராட்டை பெற்றது.

தற்போது ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வரும் ‘ஹார்ட் பீட்’ தொடரில் டாக்டராகவே நடிக்கிறார். அவரது கதாபாத்திரமான ‘ரீனா’ பாப்புலராகி உள்ளது. அடுத்து சினிமாவில் நடிக்க தயாராகி வருகிறார்.

இதுகுறித்து அவர் கூறும்போது “தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்களைக் கொடுத்து வருகிறது. அந்த வகையில், நடிகைகள் ரேவதி, நதியா, ஜோதிகா மற்றும் சாய்பல்லவி ஆகியோர் வழியில் நானும் தரமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க இருக்கிறேன். நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையிலான கதாபாத்திரம் வரும்போது முழு அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்கத் தயாராக இருக்கிறேன். நிறைய வாய்ப்புகள் வருகிறது, கதைகள் கேட்கிறேன். விரைவில் அறிவிப்பு வெளிவரும்” என்கிறார் தீபா.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments