Wednesday, March 18, 2026
spot_img
Homeஇந்திய செய்திகள்ஆக்சியம் 4 திட்டம் – அதிபர், பிரதமர் மோடி வாழ்த்து

ஆக்சியம் 4 திட்டம் – அதிபர், பிரதமர் மோடி வாழ்த்து

அமெரிக்க விண்வெளி கழகமான நாசா, இந்திய விண்வெளி கழகமான இஸ்ரோ ஆகியவை இணைந்து ஆக்சியம் ஸ்பேஸ் ஆக்ஸ்-4 என்ற திட்டத்தின் கீழ், சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு வீரர்களை அனுப்பியது. அதன்படி, ஆக்சியம் 4 திட்டம் இன்று வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டது. இந்திய வீரர் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் விண்வெளி பயணம் மேற்கொண்டனர்.

புளோரிடாவில் இருந்து பால்கன் 9 மூலம் டிராகன் விண்கலத்தில் நால்வரும் விண்வெளிக்கு பயணித்துள்ளனர். இந்நிலையில், ஆக்சியம் 4 திட்டத்திற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,” குழுவின் கேப்டனாக இயங்கி ஒரு புதிய மைல்கல்லை சுபான்ஷு சுக்லா படைத்துள்ள இந்த நேரத்தில், அவரை நினைத்து மொத்த தேசமும் பெருமையாக உணர்கிறது. இந்தியா, அமெரிக்கா, போலந்து, ஹங்கேரி வீரர்களை இணைத்த இந்த ஆக்சியம் மிஷன் 4, இந்த உலகமே ‘வசுதைவ குடும்பகம்’ என்ற ‘ஒரே குடும்பம்’ என்பதை நிரூபிக்கிறது; இந்த பணி வெற்றி பெற வாழ்த்துகள். பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில்,” நமது நம்பிக்கையை சுமந்து செல்கிறார் சுபான்ஷு சுக்லா. இந்திய விண்வெளி வீரர் குரூப் கேப்டன் சுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற உள்ளார். 140 கோடி இந்தியர்களின் வாழ்த்துகளை, நம்பிக்கையை சுபான்ஷு சுக்லா சுமந்து செல்கிறார். அவருக்கும் மற்ற விண்வெளி வீரர்களுக்கும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறோம்” என்றார்” என்றார்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments