Monday, March 16, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்அருண் விஜயின் `தடையறத் தாக்க’ திரைப்படம் மறு வெளியீடு

அருண் விஜயின் `தடையறத் தாக்க’ திரைப்படம் மறு வெளியீடு

2012 ஆம் ஆண்டு மகிழ் திருமேனி இயக்கத்தில் அருண் விஜய்,மம்தா மோகந்தாஸ், ரகுல் ப்ரீத் சிங் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியானது தடையறத் தாக்க திரைப்படம். திரைப்படம் வசூல் ரீதியாக பெரிதும் பேசப்படவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் நாளடைவில் இப்படம் மக்களிடம் அங்கீகாரம் பெற்றது. இந்நிலையில் திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் முடிவடைந்த நிலையில் படத்தை படக்குழு மீண்டும் இன்று வெளியீடு செய்கிறது. அருண் விஜய் கடைசியாக பாலா இயக்கத்தில் வணங்கான் திரைப்படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments