Sunday, October 18, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்அரச மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் நல்லடக்கம்!

அரச மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் உடல் நல்லடக்கம்!

72 குண்டுகள் முழங்க அரச மரியாதையுடன் இசையமைப்பாளர் தேவாவின் பூத உடலுக்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்று உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தேவாவின் உடல் அவரது சொந்த ஊரான ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் எடுத்து செல்லப்பட்டது.

அங்கு உள்ளூர் மக்களும் இரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து, தேவாவுக்கு சொந்தமான தோட்டத்தில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இசையமைப்பாளர் தேவா,தமிழ் சினிமாவில் தேனிசைத் தென்றல் என்று இரசிகர்களால் கொண்டாடப்பட்டவர்.

1986-ம் ஆண்டு வெளிவந்த ‘மாட்டுக்கார மன்னாரு’ என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தேவா சினிமாவில் காலடி எடுத்து வைத்தார்.

அதன் பின்னர் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், அஜித் என முக்கிய நடிகர்க ளின் படங்களுக்கு இசையமைத்துள்ள தேவா, முன்னணி இசையமைப்பாளராக கொடிகட்டிப் பறந்தார்.

இந்நிலையில், சில நாட்களாகவே உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த தேனிசைத் தென்றல் தேவா, நேற்று காலை உடல்நலக்குறைவால் தனது 75 ஆவது வயதில் காலமானார்.

தேவா உயிரிழந்த தகவல் திரையுலகினர் மற்றும் இரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்ட தேவாவின் பூத உடலுக்கு முதல் அமைச்சர் விஜய், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் திரை பிரபலங்களான ரஜினிகாந்த், கமல் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments