Wednesday, March 11, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அரச திணைக்களம் இரண்டால் வடக்கு மாகாணத்திற்கு அதிக பாதிப்பு! ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் -...

அரச திணைக்களம் இரண்டால் வடக்கு மாகாணத்திற்கு அதிக பாதிப்பு! ஐனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் – வடக்கு மாகாண ஆளுநர்

வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் வடக்குமாகாணத்திற்கு அதிகமான பாதிப்புகளை சந்தித்துள்ளது இவை தொடர்பில் ஐனாதிபதியின் கவனத திற்கு கொண்டுசெல்லப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்துக்கு அதிகளவான நிதி பல்வேறு வகையிலும் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை வினைத்திறனாகவும், ஒருங்கிணைந்தும், விரைவாகவும் நிறைவேற்றுவது தொடர்பாக கடற்றொழில் நீரியல்வளத்துறை அமைச்சர் இ.சந்திரசேகரன் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோர் இணைத் தலைமையில் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை (18) இடம்பெற்றது. இதன்போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வனவளத்திணைக்களம், வன உயிரிகள் திணைக்களத்தால் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கும் பாதிப்பு இருந்தாலும் வடக்கு மாகாணத்தில் அதிகூடிய பாதிப்பு இருப்பதாகக் குறிப்பிட்டார்.

மக்களின் மீள்குடியமர்வு, விவசாயம், அபிவிருத்தி உள்ளிட்ட பல்வேறு விடயங்களுக்கு இடையூறாக இந்த இரு திணைக்களங்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன.

வடக்கு மாகாணம் கால்நடை உற்பத்தித் துறையில் மிகச் சிறந்த நிலையில் உள்ளபோதும் கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாமல் இருப்பது பெரும் பின்னடைவு சட்டவிரோதமான மணல் அகழ்வு மிகப்பெரிய பிரச்சினையாகவுள்ளது .

வடக்கு மாகாணத்தில் ஆளணி வெற்றிடங்கள் நிரப்பப்படவேண்டும் என்றும், ஆளணிகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும். இது தொடர்பில் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியின் கவனத்துக்கு கொண்டு செல்லவேண்டும் என்றார்.

 

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments