Sunday, June 7, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்அன்னதான வரிசையில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி

அன்னதான வரிசையில் காத்திருந்தவர்கள் மீது கார் மோதி விபத்து: 6 பேர் பலி

கொழும்பு – மீகொட பகுதியில் அன்னதான (தானசாலை) வரிசையில் நின்றுகொண்டிருந்தவர்கள் மீது கார் மோதியதில் ஆறு பேர் உயிரிழந்தனர்.

அத்துடன், காயமடைந்த சிறு குழந்தை உட்பட ஏழு பேர் ஹோமகம மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவிசாவளை பகுதியிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த குறித்த கார் மோதியதில், அன்னதான  வரிசையில் காத்திருந்த 15, 32 மற்றும் 56 வயதுடைய மூன்று பெண்களும், 35 மற்றும் 38 வயதுடைய மூன்று ஆண்களும் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments