Tuesday, March 17, 2026
spot_img
Homeசினிமா செய்திகள்அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன்

அட்லி படத்தை அடுத்து மேலும் 2 புதிய படங்களில் கமிட்டான அல்லு அர்ஜுன்

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் புஷ்பா மற்றும் புஷ்பா 2. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுடன் ராஷ்மிகா மந்தனா, பஹத் பாசில், ஜெகபதி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தார்கள். கடந்த டிசம்பர் 5ம் தேதி திரைக்கு வந்த இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் 1800 கோடி வசூலித்தது. அந்த படத்தை அடுத்து அட்லி இயக்கும் படத்தில் நடிப்பதற்கு தயாராகி வருகிறார் அல்லு அர்ஜுன். சயின்ஸ் பிக்சன் கதையில் உருவாகும் இந்த படத்தில் தீபிகா படுகோனே, மிருணாள் தாக்கூர் உள்ளிட்ட பல நடிகைகள் கமிட்டாகி உள்ளார்கள். மேலும், புஷ்பா- 2 படத்திற்கு பிறகு திரி விக்ரம் இயக்கும் படத்தில் நடிப்பதாக இருந்த அல்லு அர்ஜுன், அந்த படத்தில் இருந்து விலகி விட்ட நிலையில், தற்போது பிரசாந்த் நீல், பசில் ஜோசப் ஆகியோர் இயக்கும் படங்களிலும் கமிட்டாகி இருக்கிறாராம். அட்லி படம் முடிந்த பின்னர் இந்த படங்கள் அடுத்தடுத்து துவங்க உள்ளன.

 

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments