வடமராட்சி நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு செம்பியன்பற்று வடக்கு பகுதியில் கேரளா கஞ்சாவுடன் நேற்று(9) கைதான இளைஞனை நான்கு நாட்கள் தடுத்துவைத்து விசாரிக்க கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
நெல்லியடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலின் அடிப்படையில் செம்பியன் பற்று வடக்கு பகுதியில் பயணித்த முச்சக்கர வண்டி ஒன்று விசேட அதிரடிப்படையால் நேற்று திடீர் சுற்றிவளைப்பு செய்யப்பட்டது
முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்து முச்சக்கர வண்டியை சோதனை செய்தபோது அதிலிருந்து 2Kg கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.
கைது செய்யப்பட்ட நபர் செம்பியன்பற்று வடக்கை சேர்ந்த 19 வயது இளைஞன் எனப்படுவதோடு கைது செய்யப்பட்ட நபரும் கேரளா கஞ்சாவும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மருதங்கேணி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டு இன்றைய(10) தினம் மருதங்கேணி பொலிசாரால் நீதிமன்றத்தில் கைதான நபர் முற்படுத்தப்பட்டார்.
கஞ்சாவுடன் கைது செய்யப்பட்ட இளைஞனை தடுத்துவைத்து விசாரணை செய்ய பொலிசார் நீதிமன்றில் அனுமதி கோரிய நிலையில் மேலும் நான்கு நாட்கள் குறித்த இளைஞனை பொலிஸ் காவலில் தடுத்துவைத்து விசாரணை செய்ய கிளிநொச்சி நீதிமன்ற நீதிவான் அனுமதி வழங்கினார்.


