Saturday, March 14, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்ஏறாவூர் வீதி விபத்தில் பெண் பலி!

ஏறாவூர் வீதி விபத்தில் பெண் பலி!

மட்டக்களப்பு, ஏறாவூர் காவல்துறை பிரிவின் கீழுள்ள தாமரைக்கேணி பகுதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற வீதி விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்தார்.

46 வயதுடைய குறித்த பெண் தனது 10 வயது மகனுடன், அவருடைய சகோதரியின் உந்துருளியில் பின் பக்கத்திலிருந்து பயணித்த வேளை, வேகமாக வந்த பிக்கப் வாகனத்தினால் மோதுண்டு சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திலேயே குறித்த பெண் உயிரிழந்ததாகவும், அவருடன் உந்துருளியில் பயணித்த அவரது சகோதரியும், மகனும் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு மருத்துவமனை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக, விபத்தை ஏற்படுத்திய பிக்கப் வாகனத்தைக் கைப்பற்றிய ஏறாவூர் காவல்துறையினர், பிக்கப் வாகன சாரதியைக் கைது செய்துள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments