வடமராட்சி நிருபர்
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதிகளில் கடல் கொந்தளிப்புடன் அதிக காற்று நிலவி வருகின்றது
வட,கிழக்கில் காற்றுடன் பலத்த மழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக வானிலை அறிவித்தல் வெளியாகிய நிலையில் இன்று அதிகாலையில் இருந்து கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரித்துவருகின்றது
கடற்பகுதிகளில் சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடவோ அல்லது கடலில் நீராடுவதற்கோ இறங்க வேண்டாமென மீனவர்களும்,பொதுமக்களும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.


