பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவூதி அரேபியா தலைநகர் ரியாத்தில் அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை சந்தித்து கலந்துரையாடினார். அப்போது இருநாடுகள் இடையே பரஸ்பர பாதுகாப்பு சார்ந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. அதாவது, வெளிநாடுகளிடம் இருந்து இருநாடுகளை பாதுகாப்பது தொடர்பில் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
இந்த புதிய பாதுகாப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் சவூதி அல்லது பாகிஸ்தானை தாக்கினால் இருநாடுகளையும் தாக்கியதாக கருதப்படும் என்ற ரீதியில் அமைந்துள்ளது. இது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா ஆசிப் தெரிவித்துள்ளதாவது: இந்தியா அல்லது வேறு எந்த நாடக இருந்தாலும், பாகிஸ்தானை தாக்கினால் சவுதி அரேபியா இதில் தலையிடும் என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இதில்நிச்சயமாக எந்த சந்தேகமும் இல்லை என்றும், அதே நேரத்தில் இது குறிப்பாக எந்த நாட்டையும் பற்றியது அல்ல எனவும், ஏனெனில் இது ஒரு கூட்டு பாதுகாப்பு ஒப்பந்தம் என்று கோரியுள்ளார். மேலும், ஆக்கிரமிப்புக்கு பயன்படுத்தப்படக்கூடாது. அதே சமயம் சவுதி அரேபியா அல்லது பாகிஸ்தானுக்கு எதிராக ஆக்கிரமிப்பு இருந்தால், நாங்கள் கூட்டாக அதை எதிர்த்துப் பாதுகாப்போம் என்று தெரிவித்துள்ளார்.


