திருமண விழாக்களில் அழைக்கப்படாத விருந்தினர்கள் வந்து விருந்து சாப்பிடும் சம்பவங்கள் புதுமையல்ல. ஆனால் ஸ்காட்லாந்தை சேர்ந்த மிஷேல் வைலி மற்றும் ஜான் தம்பதியரின் திருமணத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.
2021 நவம்பரில் நடந்த இவர்களின் திருமண புகைப்படங்களில், மணமக்கள் அருகே நின்ற ஒருவரை தம்பதியினர் யாரும் அடையாளம் காண முடியவில்லை. அவர் யார் என்ற மர்மத்தை கண்டுபிடிக்க மிஷேல் பல ஆண்டுகள் முயன்றும் தீர்வு கிடைக்கவில்லை.
இறுதியாக, சமூக வலைத்தளத்தின் மூலம் மர்மம் வெளிச்சம் கண்டது. புகைப்படத்தில் இருந்தவர் அயர்ஷையரை சேர்ந்த ஓவியர் ஆண்ட்ரூ என்பது தெரியவந்தது. அவர் தனது மனைவியுடன் வேறு ஒரு திருமணத்திற்கு செல்லும் நிலையில் தவறுதலாக மிஷேலின் திருமணத்திற்கு சென்றுவிட்டதாக பேஸ்புக்கில் உரையாடியதில் வெளிப்பட்டது.
இதன் மூலம் நான்கு ஆண்டுகள் நீடித்த மர்மம் தீர்ந்ததாக மிஷேல் சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ளார்.


