Thursday, March 12, 2026
spot_img
Homeஇலங்கை செய்திகள்கோமா நிலைக்கு சென்ற கைதிக்கு நடந்தது என்ன?

கோமா நிலைக்கு சென்ற கைதிக்கு நடந்தது என்ன?

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் விளக்கமறியல் கைதியின் சகோதரிக்கு எதிராக யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினரால் , யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞன் ஒருவர் முல்லைத்தீவு நீதிவான் நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியல் கைதியாக யாழ்ப்பாண சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11ஆம் திகதி முதல் இன்றைய தினம் வரையில் யாழ். போதனா வைத்தியசாலையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

சிகிச்சை பெற்று வரும் இளைஞனின் சகோதரி நேற்றைய முன்தினம் வெள்ளிக்கிழமை யாழ். ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது , 08ஆம் திகதி தனது சகோதரன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தான் சகோதரனிடம் கேட்ட போது ” அடிச்சு போட்டாங்க” என கூறினார் என்று சகோதரி கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் , குறித்த இளைஞன் சிறைச்சாலையில் , விழுந்தமையால் தான் தலையில் காயமடைந்ததாகவும் , சிறைச்சாலைக்குள் யாரும் தாக்கவில்லை என்றும் சிறைச்சாலை நிர்வாகம் ஊடகங்களுக்கு பதில் அளித்திருந்தது.

அதனை அடுத்து நேற்றைய தினம் சனிக்கிழமை , இளைஞனை சிறைச்சாலைக்கு தாக்கியதாக ஊடகங்களில் கருத்து தெரிவித்தமைக்கு எதிராக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் யாழ்ப்பாண சிறைச்சாலை நிர்வாகத்தினர் முறைப்பாடு செய்துள்ளனர்

RELATED ARTICLES
- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments